Home » மடு பகுதியில் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான ஒரு தொகை காணி பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பு
மறைமாவட்டச் செய்திகள் மன்னார்

மடு பகுதியில் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான ஒரு தொகை காணி பொது மக்களுக்கு பகிர்ந்தளிப்பு

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பூமலர்ந்தான் பகுதியில் மன்னார் மறைமாவட்டத்திற்கு சொந்தமான ஒரு தொகை காணி மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் பதினொரு நபர்களுக்கு உறுதி காணியாக ஆயர் இல்லத்தினால் எழுத்துமூல உறுதி இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மடு றோட் தேவாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது

மன்னார் பூமலர்ந்தான் பகுதியில் மன்னார் மறைமாவட்டத்திற்கு சொந்தமான காணிகளில் யுத்ததிற்கு பின்னர் இடம் பெயர்ந்த மக்கள் பலர் குடியேறியிருந்த நிலையில் வாழ்வாதார செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தனர். குறித்த மக்களின் கோரிக்கைக்கு அமைவாக 11 குடும்பங்களுக்கு அவர்கள் குடியிருந்த காணிகள் அனைத்தும் அவர்களின் தேவைகளின் அடிப்படையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவின் நிதி அணுசரனையில் உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைஇ மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமெல்இ மெசிடோ நிறுவன குழுத்தலைவர் திரு. ஜாட்சன் பிகிறாடோ மற்றும் மடு றோட் பங்குத்தந்தை அருட்பணி.றோஷான் அடிகளாரும் கலந்து கொண்டு மக்களுக்கான உறுதிபத்திரங்களை வழங்கி வைத்தனர்

Topics