Home » அருட்பணி. G. E. மேரி யோசப் அடிகளார் மறைந்தார்
நீத்தார் நினைவஞ்சலி மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

அருட்பணி. G. E. மேரி யோசப் அடிகளார் மறைந்தார்

யாழ். மறைமாவட்ட திருஅவையின் மூத்த குருக்களில் ஒருவரான அருட்திரு G. E. மேரி யோசப் அடிகளார் தனது 85வது அகவையில் 19.02.2021 நேற்று வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். 1962ம் ஆண்டில் யாழ். மறைமாவட்ட குருவாக ஆயர் எமிலியானுஸ் ஆண்டகை அவர்களினால் திருநிலைப்படுத்தப்பட்டு மறைமாவட்டத்தின் நல்லூர், பேராலயம், ஊர்காவற்துறை, நாவந்துறை, மானிப்பாய், பண்டியந்தாழ்வு ஆகிய பங்குத் தளங்களில் உதவிப் பங்குத்தந்தையாகவும், பங்குதந்தையாகவும் பணியாற்றியுள்ளதுடன் புனித மடுத்தினார் சிறிய குருமட அதிபராகவும், பாதுகாவலன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராவும், அச்சக முகாமையாளராகவும் புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியின் உப அதிபராகவும், உருவாக்குனராகவும் பல நிலைகளிலும் சிறப்பான பணியாற்றியுள்ளார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் இன்று 20.02.2021 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வைக்கப்படும். தொடர்ந்து 22.02.2021 திங்கட்கிழமை மதியம் 3.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அடக்கச் சடங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இறைவனடி சேர்ந்த அருட்தந்தையின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறி அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்னார் மறைமாவட்டம் சார்பாக மன்றாடுவோம்.

Topics