Home » நல்லாயன் வீதியில் இரவோடு இரவாக முளைத்த பிள்ளையார்.
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

நல்லாயன் வீதியில் இரவோடு இரவாக முளைத்த பிள்ளையார்.

 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆன்மீகப் பணியகத்தின் ஆலய நுழைவு வீதியான நல்லாயன் தேவாலய ஒழுங்கைக்குச் சமீபமாக இரவோடிரவாக பிள்ளையார் சிலை ஒன்று முளைத்துள்ளது.  

நல்லாயன்தேவாலய ஒழுங்கையில் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான கிறிஸ்தவ ஆலயம் கடந்த 38 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மேலும் இவ் ஒழுங்கையில் கிறிஸ்தவக் குடும்பங்களும் இந்துக் குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் எவ்வித முரண்பாடுகளுமின்றி சமய நல்லிணக்கத்துடன் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வரும் நிலையில் இவ் ஒழுங்கையில் இச்சிலையை திடீரென அமைப்பதற்கான தேவை யாருக்கோ எழுந்துள்ளது…அதுவும் இரவோடிரவாக… சட்ட ரீதியற்ற முறையில்…  
இது தேவையற்றமுரண்பாடுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கமே தவிர வேறொன்றுமில்லை.   
சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் உடனடியாக இதில்தலையிட்டு தீர்வு வழங்குவார்களா? 

 ஏற்கனவே நல்லாயன் வீதியின் பெயரை பிள்ளையார் வீதி என மாற்றுவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்…

About the author

admin

Add Comment

Click here to post a comment

Topics

Featured