Home » புனித யாகப்பர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பீடப்பணியாளர் தினம்
யாழ்ப்பாணம்

புனித யாகப்பர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பீடப்பணியாளர் தினம்

புனித யாகப்பர் ஆலய பங்கு பீடச்சிறார்கள் 21.11.2021 தங்கள் விழாவினை சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத்தந்தை ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
மறையுரையில் பீடப்பணியாளர்களின் பணியின் சிறப்பு பற்றி பங்குத்தந்தை மிக அழகாக எடுத்துக்கூறினார்.
திருவழிபாடுகளை பீடச்சிறார்கள் மிகவும் நேர்த்தியாக ஒழுங்கமைத்திருந்தனர்.
கடந்தவாரம் அவர்களுக்கு நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றியோரிற்கு திருப்பலியின் நிறைவில் பரிசில்கள் வழங்கப்பட்டன.
மாலை ஆலய மண்டபத்தில் ஒன்றுகூடலும் இடம்பெற்றது.
திருப்பலிப் பீடத்தில் இறைவனுக்கு நெருக்கமாக நின்று உன்னதமான பணியாற்றும் சிறார்களுக்கும், அவர்கள் பொறுப்பாளர்களுக்கும் எமது வாழ்த்துகள்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics