Home » வவுனியா இறம்பைக்குளம் பங்கின் துணை ஆலயமான குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழாத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடை பெற்றது
மறைமாவட்டச் செய்திகள் மன்னார்

வவுனியா இறம்பைக்குளம் பங்கின் துணை ஆலயமான குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழாத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடை பெற்றது

வவுனியா இறம்பைக்குளம் பங்கின் துணை ஆலயமான குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழாத் திருப்பலியானது இன்று ஞாயிற்றுக்கிழமை 21/11/2021 காலை 6:00 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமானது. 6:30 மணிக்கு திருவிழாத் திருப்பலி கூட்டுத் திருப்பலியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் பங்கு தந்தை அருட்பணி தேவராஜா கொடுத்தோர் அடிகளார் திருப்பலி தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். ‌அருட்தந்தையோடு உதவிப் பங்குத்தந்தை. மற்றும் அருட்பணி பெனி அடிகளார். அருட்பணி செல்வராஜ் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்கள்.இன்றைய திருப்பலியானது கிறிஸ்துவின் சாட்சிகளாய் வாழ்வோம் என்னும் கருப்பொருளில் கிறிஸ்து அரசர் ஆலய மேய்ப்புபணிசபை உறுப்பினர்கள் சிறப்பித்திருந்தார்கள்.திருப்பலி நிறைவில் திருச்சுரூப பவனி ஆலய வளாகத்தினுள் நடைபெற்று இறுதியில் திருச்சுரூப ஆசிர்வாதமும் இடம்பெற்றது.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics