Home » ஆண்டு முழுவதும் இறைவனின் தாயாகிய மரி அன்னை எம் எல்லோரையும் பாதுகாப்பாள்- யாழ் மறைமாவட்ட ஆயர்
சிந்தனை

ஆண்டு முழுவதும் இறைவனின் தாயாகிய மரி அன்னை எம் எல்லோரையும் பாதுகாப்பாள்- யாழ் மறைமாவட்ட ஆயர்

ஆண்டு முழுவதும் இறைவனின் தாயாகிய மரி அன்னை எம் எல்லோரையும் பாதுகாப்பாள் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டை தொடங்குங்களென யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தனது புதுவருட வாழ்த்துச்செய்தியில் இறைமக்களுக்கு சிறப்பான அழைப்பு விடுத்ததுள்ளார். ஆயர் அவர்கள் தனது செய்தியில், கடந்த ஆண்டு பல இன்பமான மற்றும் துன்பமான அனுபவங்களை தந்து எம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது. புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கமும் இனியதாய் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எம் எல்லோர் மனதுகளிலும் நிறையவே உண்டு. ஆகவே பிறக்கும் இப்புதிய ஆண்டு முழுவதும் தேவ அன்னை எம்மைப் பாதுகாப்பாள் என்ற நம்பிக்கையோடு புதிய ஆண்டை தொடங்குங்கள்.ஆண்டு முழுவதிலும் தேவ அன்னையின் தாய்க்குரிய அன்பையும் பாசமிகு பராமரிப்பையும் இறை பாதுகாப்பையும் வேண்டித் தினமும் மன்றாடுங்கள். தேவ தாயை எப்போதும் எங்கிருந்தாலும் என்ன நடந்தாலும் எங்கள் அன்னையாக மனதிலிருத்தி என்ன செய்தாலும் அன்னையின் துணையுடன் செய்யுங்கள். அன்னை வெற்றியையே பெற்றுத் தருவாளென குறிப்பிட்டுள்ளார்.

Topics