Home » தியன புனையும் முனைப்புடன் கிறிஸ்து பிறப்பு விழாச் செய்தியை அறிவிக்கும் கரோல் ஊர்திப் பவனிகள்
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

தியன புனையும் முனைப்புடன் கிறிஸ்து பிறப்பு விழாச் செய்தியை அறிவிக்கும் கரோல் ஊர்திப் பவனிகள்

புதியன புனையும் முனைப்புடன் கிறிஸ்து பிறப்பு விழாச் செய்தியை அறிவிக்கும் கரோல் ஊர்திப் பவனிகள் கடந்த நாட்களில் பாசையூர் மற்றும் மல்வம் ஆகிய பங்குகளில் மிகவும் சிறப்பான முறையில் நடந்துள்ளன. இக்கரோல் ஊர்திப் பவனிகள் பாசையூர் பங்கில் பங்குத்தந்தை அருட்திரு ஜெரோ செல்வநாயகம் அவர்களின் வழிநடத்தலில் கடந்த 26ஆம் 27ஆம் திகதிகளிலும் மல்வம் பங்கில் பங்குதந்தை அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ம் திகதி கடந்த புதன்கிழiயும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒளிமயமான ஊர்தியில் இளைஞரும் மகளிரும் கரோல் கீதங்கள் இசைத்து முன்செல்ல மறு ஊர்தியில் மறைக்கல்வி சிறுவர் சிறுமியர் ஒளிவீசும் பாலன் குடிலிலே, குழந்தை இயேசுவுடன் அன்னை மரி, தந்தை யோசேப்பு, வானதூதர், இடையர்கள், மூவரசர்கள் யாவரையும் உயிரோட்டமாகச் சித்தரித்தபடி வலம் வந்தனர். இந்நிகழ்வு பார்ப்பவர்களின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் சென்ற இடமெங்கும் மக்கள் இவர்களை இன்முகத்துடன் வரவேற்று கிறிஸ்து பிறப்புவிழா மகிழ்வில் இணைந்திருந்தனர்.

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics