மமன்னார் மாவட்ட செயலகத்தினால் 2021ம் ஆண்டுக்கான ஒளி விழா மாவட்ட செயலக ஜெய்க்கா மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (29.12.2021) சிறப்புற இடம்பெற்றது.இந்நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் மாவட்ட அருட்தந்தையர்கள், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் இந் நத்தார் ஒளி விழாவினை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சிறப்பித்திருந்தனர்.குறித்த ஒளி விழா நிகழ்வில் கரோல் கீதம் இசைக்கப்பட்டு கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.இதேவேளை தற்போதுள்ள கொரோனாத் தொற்று அச்ச நிலையினைக் கருத்திற் கொண்டு வழமைபோன்று அல்லாது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டவளவில் மேற்படி விழா இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
ன்னார் மாவட்ட செயலகத்தில் நத்தார் பண்டிகை ஒளி விழா
7 months ago
1 Min Read

Add Comment