Home » இலங்கை லொயலா வளாகத்தின் ஆங்கில கற்கை நெறியானது நெடுந்தீவு பங்கில் அரம்பம்
மறைமாவட்டச் செய்திகள் யாழ்ப்பாணம்

இலங்கை லொயலா வளாகத்தின் ஆங்கில கற்கை நெறியானது நெடுந்தீவு பங்கில் அரம்பம்

இலங்கை லொயலா வளாகத்தினால் (Loyola campus) முன்னெடுக்கப்படும் 06 மாதகால ஆங்கில கற்கை நெறியானது நெடுந்தீவு பங்குப் பணிமனையில் (23/03/2022) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வளவாளராக பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் மற்றும், இயேசுசபை துறவிகளும் இணைந்துள்ள நிலையில் நிகழ்நிலையூடாகவும் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கற்கைநெறியின் நிறைவில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் மேலதிக கற்கைக்கான வாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்தும் கணணி கற்கையை ஆரம்பிப்பது தொடர்பில் குறித்த கல்வி வளாக நிர்வாகத்தினருடன் (Loyola campus)இணைந்து திட்டமிட்டு வருவதாகவும், இக் கற்கையினை 06 மாதகால டிப்புளோமா தரத்திற்கு உயர்துவதே தனது நோக்கமெனவும், இதற்காக நெடுந்தீவின் கல்வி வளற்சியில் பங்காற்ரிய நலன்விரும்பிகளது ஆதரவினையும் எதிர்பார்திருப்பதாக பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.முப்பதிற்கும் அதிகமான இளையோர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருப்பதுடன் நெடுந்தீவு மேற்கு மற்றும் தூர கிராமங்களிலிருந்து வருகைதருகின்ற மாணவர்களுக்கான சேவைகளும் வழங்கப்படுகின்றன.பங்குத்தந்தையின் முயற்சியின் பயனாக இலங்கை லொயலா வளாகத்தின் செயற்பாடுகள் நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

About the author

Frank

Add Comment

Click here to post a comment

Topics